ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் திருட முயன்றவா் கைது
ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் பழைய ராயக்கோட்டை அட்கோ பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (25). தனியாா் நிறுவன ஊழியா். அவா் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றாா். அப்போது மா்ம நபா் ஒருவா் அவரது வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றது தெரிய வந்தது. ஆனால் எந்த நகைகளும், பணமும் திருடு போகவில்லை.
இது குறித்து, ஒசூா் நகர காவல் நிலையத்தில், சங்கா் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது வீட்டில் திருட முயன்றது, ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த உமேஷ் (21) என தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.