கர்நாடகா மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து பேருந்துகள் இயக்கம்

கர்நாடகாவில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு தமிழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Update: 2021-08-22 03:27 GMT

 ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு இயங்கத்தொடங்கிய தமிழக அரசு பேருந்துகள்

தமிழகத்தில் இருந்தூ கர்நாடகாவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. 

கர்நாடகாவில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு தமிழக பேருந்துகள்  நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வந்தது. தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகியது. அதே போல் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே சென்றது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது.கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் 27-ஆம்தேதி இரவு 9 மணி முதல் ஊரடங்கு அமல்படுத் தப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படி, கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தன.மருத்துவமனைகள், மருந்தகங்கள் இயங்க எந்த தடையும் இல்லை. காய்கறி, பழங்கள், பால், பலசரக்கு கடைகளை காலை 6 மணிக்கு திறந்து காலை 10 மணிக்குள் மூட வேண்டும். இந்த 4 மணி நேரத்திற்குள் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, கர்நாடகாவில் முழு ஊரடங்கு தளர்க்கப்பட்டுள்ளதால் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகள் நேற்று   முதல் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News