மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
தமிழக- கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடியில் முழு அடைப்பு காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.;
கொரோனா 3-வது அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் கர்நாடகம் தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவடி பகுதியில் கடைகள், ஓட்டல்கள், மதுபான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் முழு ஊரடங்கையொட்டி மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவடியில் 30 க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதித்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள், மருத்துவனைக்கு செல்லும் வாகங்கள் போன்ற அவசர சேவைக்கு செல்லும் வாகனங்கள்மட்டும் கிருமி நாசினி தெளித்து தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு ஓசூக்கு வந்த கர்நாடக அரசு பேருந்து ஜுஜுவடியில் தடுத்து நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு பேருந்தை திருப்பி அனுப்பினர். மேலும் தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களை திரும்பி அனுப்பி வருகிறார். இதனால் மாநில எல்லையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.