கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் வரும் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் விற்பனைக்கு வரும் விவசாயிகளுக்கு சிறப்பு மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம்

Update: 2022-01-11 13:00 GMT

கொரோனா தடுப்பூசி செல்லுத்தி கொள்ளாமல் விற்பனைக்கு வரும் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போடப்பட்டது

கொரோனா தடுப்பூசி செல்லுத்தி கொள்ளாமல் விற்பனைக்கு வரும் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி நிர்வாக அலுவலர் தகவல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரின் முக்கிய பகுதியான தாலூகா அலுவலக சாலையில் உள்ள உழவர் சந்தையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க, மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி உழவர் சந்தையை மூட உத்தரவிட்டு, வேறு பகுதியில் மாற்ற அறிவுத்தினர். இதையடுத்து இன்று உழவர் சந்தை மூடப்பட்டது, தற்காலிகமாக சிறுவர் பூங்கா,ஓசூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானம், ஒருங்கிணைந்த விற்பனை கூடம் ஆகிய மூன்று பகுதிகளில் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒசூரில் 210 பேர், உறுப்பினர்களாக உழவர் சந்தையில் பதிவு செய்திருப்பதாகவும் மூன்று இடங்களில் தலா 70 விவசாயிகள் என டோக்கன் வழங்கி ,விவசாயிகளுக்கு ஒதுக்கீய 3 இடங்களில் அவர்களுக்கு விருப்பம் உள்ள இடங்களில் கடைகள் வைக்க குலுக்கல் முறையில் இடத்தேர்வு செய்து கடைகள் வைத்து விற்பனை செய்ய அனுமதி வங்களியுள்ளார். மேலும் விற்பனைக்கு வரும் விவசாயிகள் அனைவரும் காட்டம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று தடுப்பூசி செல்லுத்தி கொள்ளாமல் வரும் விவசாயிகளுக்கு இந்த பகுதியில் சிறப்பு முகாம் மூலம் கொரோன தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சுமிதா தெரிவித்தார்.

உழவர் சந்தை மூடப்பட்டதால் தற்காலிக சந்தைகளில் விவசாயிகள் விற்பனையை தொடங்கி உள்ளனர்,பொதுமக்களும் தடையின்றி தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News