ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 31ம் தேதி காலை 10 மணிக்கு இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 31ம் தேதி காலை 10 மணிக்கு இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் மணிமேகலை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:- ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021- 22ம் கல்வியாண்டில் இளமறிவியல், கணினி அறிவியல், கணித அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு கட் ஆப் மார்க் 230 மேல் உள்ளவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மேலும் வருகின்ற 2ம் தேதியன்று கலைப்பிரிவு பாடங்களுக்கான பி.ஏ.தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கு 100க்கு 50 மதிப்பெண்கள் உள்ளவர்களும் பிகாம், பிகாம் சி.ஏ., பி. பி.ஏ,. ஆகிய பாடத்திற்கு கட் ஆப் மார்க் 270 க்கு மேல் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு கல்லூரிக்கு நேரடியாக வரும் மாணவர்கள் ஆவணங்கள், ஜாதி சான்றிதழ், 10 மற்றும் 11 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார், மாற்று சான்றிதழ் பதிவு செய்த விண்ணப்ப படிவம் மற்றும் சேர்க்கை கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது