ஓசூரில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஓசூரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா, ஏ.எஸ்.டி.சி சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் நாள்தோறும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றிக்கொள்றுமாறு கடை உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் உரிய அறிவிப்புகள் கொடுத்தும் இதுவரை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படவில்லை.
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், வருவாய்துறையினர் உதவியுடன் சாலையின் இரு புற முடி கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையுறாக இருந்த கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளை பெக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி துவங்கியது.
மேலும் சாலைப் போக்குவரத்துக்கு இடையுறாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.