மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
மாநில எல்லையில் ஊரடங்கு நேரத்தில் அனாவசியமாக சுற்றித்திரியும் வாகனங்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.;
வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது வார இறுதி ஊரடங்கு நாளான இன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து இன்றி ஓசூரில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மாநில எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களை தடுத்து சோதனைகள் மேற்கொண்டு அனாவசியமாக சுற்றித்திரியும் வாகனங்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தொழிற்சாலை, இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர சேவைகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் சோதனை செய்து, கிருமி நாசினி தெளித்து, தமிழகத்தில் அனுமதிக்கின்றனர். மேலும் கர்நாடகாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எந்த தடையின்றி தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.