ஜுஜுவாடியில் கிருமி நாசினி தெளித்து, வெப்பநிலை சோதனைக்குப்பின் வாகனங்கள் அனுமதி

ஓசூர் ஜுஜுவாடியில் கிருமி நாசினி தெளித்து, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின் தமிழகத்திற்குள் வாகனங்களை அனுமதிக்கப்படுகின்றனர்.

Update: 2021-12-03 17:20 GMT

கர்நாடகாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு ஓசூர் எல்லையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருவருக்கு ஒமிக்ரான்  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த ஐந்து பேருக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பேரும் மருத்துவர்கள் ஆவர்கள் மேலும் இரு குழந்தைகள் பாதிக்கப்பட்டு அந்த 5 நபர்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் பரிசோதனையின் முடிவு வந்த பிறகே பெங்களூருவில் ஒமிக்ரான் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவரும்.

இந்த நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூரு மாநகரின் பொம்மசந்திரா பகுதியை சேர்ந்தவர். இப்பகுதியில் தொழிற்பேட்டை நிறைந்துள்ளதால் ஓசூரில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருவது வழக்கம். இதனால் மாவட்டத்தில் நோய்தொற்று பரவும் வாய்ப்பு அதிகம்.

இதனால் மாநில எல்லையில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கை ஈடுபடவேண்டும். மேலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களில் வருபவர்களை வெப்பநிலை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து இன்று மாலை கர்நாடகாவிலிருந்து வரக்கூடிய வாகன ஓட்டிகளின் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவை சுகாதார குழுவினர் பரிசோதித்து, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து கிருமிநாசினி தெளித்த பின்பே தமிழகத்திற்கு வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.

சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News