புத்தாண்டில் நாடு நலம்பெற விவசாயம் செழிக்க வேண்டி ஒசூரில் கடலைக்காய் திருவிழா

ஒசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெற விவசாயம் செழிக்க வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது

Update: 2022-01-01 13:30 GMT

கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் பிரகாரத்தின் மீதும் ஆஞ்சநேயர் சாமியின் மீது எரிந்து வழிபாடு நடத்தினர்

ஒசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெற விவசாயம் செழிக்க வேண்டி  நடைபெற்ற கடலைக்காய் திருவிழாவில்  ஆஞ்சநேயர் மீது கடலை எரிந்து பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புத்தாண்டையொட்டி நாடு நலம்பெற வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது கடலைக்காயை எரிந்து நு£தன வழிபாட்டை மேற்கொண்டனர்.

ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் பல ஆண்டுகளாக கடலைக்காய் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று இந்த கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெறும் அதைபோல இன்று நடைபெற்ற விழாவில் ஆஞ்சநேயருக்கு காலை முதலே ஓமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.பின்னர் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதனைத்தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் பிரகாரத்தின் மீதும் ஆஞ்சநேயர் சாமியின் மீது எரிந்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News