ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி திருட்டு
ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற கர்நாடகாவை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சவுகத் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ சுப்பிரமணியம். இவரது வீட்டில் கடந்த 8ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டு அலமாரியில் இருந்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து இளங்கோ சுப்ரமணியம் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீஸ் எஸ்ஐ வினோத்குமார், கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்கின்ற ஜப்பான் ராஜா என்பவர் மீது இன்று வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.