ஓசூர் அருகே தலையை வெட்டி கோவில் வாசலில் வைத்துச் சென்ற கொலையாளிகள்
ஓசூர் அருகே தலையை வெட்டி கோவில் வாசலில் வைத்து சென்ற கொலையாளிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் அருகே எலுவப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதீப் கூலி பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 3 வயது பெண் குழந்தை, 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நள்ளிரவு மர்ம நபர்களால் பிரதீப் தலையை துண்டித்து கொடூர கொலை செய்து, எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வாசலில் வைத்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கோவில் வாசலில் தலை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலையை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உடலை தேடி வரும் போலீசார் கொலைக்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் வாசலில் மனித தலை இருந்ததை அறிந்த அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.