தொழிலாளி வெட்டிக்கொலை: தலைமறைவாக இருந்த தந்தை கைது

மத்திகிரி அருகே கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-05-11 16:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அச்செட்டிப்பள்ளி அஞ்சல் எடப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் . இவர்களின் மகன் மஞ்சுநாத். கூலித் தொழிலாளி.

மஞ்சுநாத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதை தந்தை கண்டித்தார். நேற்று இரவு தந்தை - மகன் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த நேரம் ஆத்திரத்தில் மஞ்சுநாத் அரிவாளை எடுத்து தந்தையை வெட்ட வந்தார்.
அப்போது மகனிடம் இருந்து அரிவாளை பிடுங்கிய எல்லப்பா, தனது மகன் மஞ்சுநாத்தின் கழுத்தின் பின்புறத்தில் வெட்டினார். இதில் மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலையுண்ட மஞ்சுநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த எல்லப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் அருகே மகனை தந்தையே வெட்டிக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News