மத்திகிரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது
மத்திகிரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி போலீஸ் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று மாலை மத்திகிரி அடுத்த ஆனெக்கல் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேன்கனிக்கோட்டை அடுத்த இஸ்லாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த லியாகத் அலிபாஷா என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 4860 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.