ஓசூர்: தந்தை பணம் தராததால் தனியார் கம்பெனி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
ஓசூர் அருகே ரூ. 5 லட்சம் பணத்தை தந்தை தர மறுத்ததால் மனமுடைந்த தனியார் கம்பெனி ஊழியர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மெய்யரசு. இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மெய்யரசு, தனது தந்தையிடம் நேற்று முன்தினம், ஐந்து லட்ச ரூபாய் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மெய்யரசு, நேற்று இரவு ராயக்கோட்டை சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஓசூர் டவுன் போலீஸ் எஸ்ஐ சித்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.