ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மோடி படத்தை மாட்ட பா.ஜ.க.வினர் முயற்சி

ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் இல்லாத நேரத்தில் மோடியின் படத்தை மாட்டிய பா.ஜ.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-12-22 12:08 GMT

ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் பிரதமர் மோடி படத்தை மாட்ட முயற்சித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.  கடந்த வாரம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அமைக்க பா.ஜ.க.வினர் ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தபோது தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி  மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்பு தான் முடிவெடுக்க முடியுமென தெரிவித்திருந்தார்

வட்டாட்சியர் சார்பில் எவ்வித தகவலும் இல்லாததால், பா.ஜ.க.வினர் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு அருகில் பிரதமரின் படத்தை மாட்டினர்

தாசில்தார் இல்லாத நேரத்தில் பா.ஜ.க.வினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதால் துணை வட்டாட்சியர்கள், மாவட்ட நிர்வாகத்தினரை கேட்க வேண்டுமென தெரிவித்து, மோடியின் படத்தை அகற்றி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற வேண்டும் என தெரிவித்ததால் பா.ஜ.க. நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபடபோவதாக கூறி 50க்கும் மேற்ப்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடியின் படத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரின் பதிலுக்கு பிறகு மாட்டுவதாக உறுதியளித்தப்பின் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News