ஓசூரில் தொழிலதிபர் படுகொலை செய்யப்பட்டது ஏன்? வெளிச்சத்துக்கு வந்த 'பகீர்' பின்னணி!

ஓசூரில், தொழிலதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பணம் கொடுக்கல் வாங்கலே காரணம் என்று தெரிய வந்துள்ளது.;

Update: 2021-06-13 04:22 GMT

ஓசூரில் தொழிலதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பணம் கொடுக்கல் வாங்கலே காரணம் என்று தற்போது தெரிய வந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அன்னை நகரை சேர்ந்தவர் பாலாஜி (30). இவரது சொந்த ஊர் வாணியம்பாடி. ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட்டில் சிறு, குறுந்தொழிற்சாலை நடத்தி வந்தார்.  இவர், கெலமங்கலம் கேசவ கோவில் தெருவை சேர்ந்த ரகுராம் (26) எனபவரிடம், ரூ.31 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.

கடந்த சில மாதங்களாக பாலாஜி நடத்தி வந்த தொழில் நிறுவனம் இயங்கவில்லை. இதனால், ரகுராமிற்கு வட்டி பணத்தை கொடுக்க அவரால் முடியவில்லை. இது தொடர்பாக, ரகுராம், பாலாஜி இடையே பிரச்சினை இருந்து வந்தது. தகவல் அறிந்த பாலாஜியின் பெற்றோர், ஓசூர் வந்து, ரகுநாத்திடம் மாதம் ரூ.5 லட்சம் வீதம் பணத்தை கொடுத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று பணம் கொடுக்க வேண்டிய தேதி என்பதால்,  ரகுராமின் வீட்டிற்கு வந்த பாலாஜி, அவரிடம் காசோலை ஒன்றை கொடுத்தார். ஏற்கனவே பாலாஜி கொடுத்த காசோலை ஒன்றில் பணம் இல்லாமல் திரும்பிய நிலையில், மீண்டும் அவர் காசோலை கொடுத்தது, ரகுராமிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரகுராம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, வீட்டு வாசலிலேயே பாலாஜியை சரமாரியாக வெட்டினார். இதில் பாலாஜிக்கு இடது கை துண்டாது. மேலும் உடலில பல இடங்களில் வெட்டு காயங்கள் விழுந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பாலாஜியை கொலை செய்ததும், ரகுராம் அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டார்.

இதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஓசூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, அட்கோ போலீசார்,  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலையின் போது ரகுராமுடன், மோகன் என்பவரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராம், மோகன் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். ஓசூரில், பண விவகாரத்தில் தொழிலதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News