ஓசூரில் ரூ.2 லட்சம் மதிப்பு குட்கா மற்றும் வாகனம் பறிமுதல்: 2 பேர் கைது
ஓசூரில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் வாகனம் பறிமுதல்; 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
தமிழகத்தில் தமிழக அரசால் குட்கா பான்மசாலா தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் குட்கா பான் மசாலா பொருட்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து குட்கா பான் மசாலா பொருட்களை அவ்வப்போது திருட்டுத்தனமாக சரக்கு வாகனங்களில் மறைத்துக் கொண்டு வருவதும், அவைகளை திருட்டுத்தனமாக அதிக விலைக்கு சில சமூக விரோதிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்த போது கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியிலிருந்து ஃபோர்ட் பிரிஸ்டோ காரின் மூலம் திருப்பூருக்கு கொண்டு செல்ல இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிபுள்ள 198 கிலோ குட்கா பான்மசாலா மற்றும் குட்கா பான்மசாலா எடுத்து வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்காவை ஏற்றிவந்த வாகன ஓட்டுனர் அசோக் சிங்(24) மற்றும் ராணா சிங் (22) அதிய இருவரையும் சிப்காட் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.