ஓசூரில் பதுக்கியிருந்த ரூ.50,000 மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

ஓசூரில் பதுக்கியிருந்த ரூ.50,000 மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்; ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-10 06:59 GMT

குடோனில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜனபர் தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் ராம்பிரகாஷ் (21). இவரது கடைக்கு அருகில் குடோன் ஒன்றையும் இவர் வைத்துள்ளார். ராம்பிரகாஷ் தனது குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக ஓசூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் போலீசார் அவரது குடோனில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 47 கிலோ எடை கொண்ட சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக ராம்பிரகாஷையும் ஒசூர் நகர போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News