ஓசூரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

ஓசூரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கைப்பற்றிய போலீசார் ஒருவரை கைது செய்தனர்.;

Update: 2021-12-28 15:49 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களுட்ன கைதானவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் வாகன தணிக்கையின் போது குட்கா பான் மசாலா பொருட்கள் கடத்தியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 585 கிலோ குட்கா பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜாஸ்வி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்பேரில் ஓசூர் எஸ்பி அரவிந்த் தலைமையில் சிப்காட் போலீசார் ஜுஜுவாடி சோதனைச் சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் பல்லூர் பகுதியிலிருந்து வேகமாக வந்த சொகுசுகாரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் 585 கிலோ குட்கா பான்மசாலா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தையும் குட்காவையும் பறிமுதல் செய்த போலீசார் தொடர் விசாரணையில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாராம் என தெரியவந்தது.

மேலும் விசாரணையில் பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது, கடத்தப்பட்ட பான்மசாலா குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

மாராமை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News