முதுகலை பட்டதாரி பெண் மாயம்
மத்திகிரி அருகே முதுகலை பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம்,மத்திகிரி கூட் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் ஹாசினி. இவர் எம்.எஸ்சி., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை 5.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை வேல்முருகன் மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.