தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ஓசூர் மாணவர்களுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கம்

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று ஓசூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2021-12-02 07:35 GMT

தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் திருமலை சக்தி இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார். குறிப்பாக ஓசூரில் கடந்த 7 ஆண்டுகளாக மாணவர்களுக்கு சிலம்பு பயிற்சி அழைத்து வருகிறார். இவரிடம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

மேலும் இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி கோவாவில் கடந்த27 முதல் 29 வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, அசாம், மகாராஷ்டிரா, டெல்லி, கோவா உள்பட பிற மாநிலங்களிலிருந்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 10, 12, 14, 17, 19, 20, 25 ஆகிய வயதுக்குள்பட்ட பிரிவின் கீழ் நடைபெற்றது.

இதில் 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பரத் மற்றும் சுக்ரிவ் ஆகிய இரண்டு பேர் தங்கப்பதக்கங்கள், 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விபூஷனா தங்கப் பதக்கம், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கௌதம் மற்றும் சந்தோஷ் முருகன் ஆகிய இரண்டு பேர் தங்கப் பதக்கம், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விஜய் ஆனந்த வெள்ளிப் பதக்கம், 20 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் அய்யப்பன், ஸ்ரீகாந்த், முருகன் மற்றும் சுரேஷ் ஆகிய 4 பேர் தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதில் மொத்தம் ஒன்பது தங்கப்பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்கள் பெற்று ஓசூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அனைவரும் வரும் ஜனவரி மாதம் 16 முதல் 20 ஆம் தேதி வரை நேபாளத்தில் நடைபெறும் உலக அளவிலான சிலம்பு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுக்கு ஓசூர் பகுதி மக்கள் பாராட்டுகள், வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News