மகள் 2வது திருமணம்: வீட்டுக்குள் சேர்க்காத மாமனுக்கு பாட்டில் குத்து

ஓசூரில் மகள் 2 வது திருமணம் செய்து கொண்டதால் வீட்டுக்குள் சேர்க்காத மாமனாரை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-09-02 14:45 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மூக்கண்டபள்ளி, எம்.ஜி.ஆர்., நகர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் பிரியதர்ஷினி. இவருக்கும் மாதேஷ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, தம்பதியர் தகராறில் விவாகரத்து ஆகியுள்ளது. இதனையாடுத்து, பிரியதர்ஷினி தன் தந்தையுடன் தங்கியிருந்தார். பிரியதர்ஷினிக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி என்கிற மணிபாரதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பெற்றோர் சம்மதிக்காததால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 30ம் தேதி, பிரியதர்ஷினி, மணிபாரதியை அழைத்து கொண்டு தன் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காத சரவணன், மகளையும், மருமகனையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். கோபமடைந்த மணிபாரதி மாமனார் என்றும் பாராமல் அவரை தாக்கி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரவணன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகார்படி ஓசூர் சிப்காட் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News