கல்லூரி மாணவன் கொலை: ஒன்றரை மாதங்களுக்கு பின் சிக்கிய கொலையாளிகள்
கல்லூரி மாணவன் கொலை வழக்கில் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு கொளையாளிகள் சிக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராம்நகரை சேர்ந்த அப்சல்(21)ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து பகுதி நேரமாக தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
கடந்த அக்டோபர் 28ம் தேதியன்று கல்லூரி முடித்து வேலைக்கு சென்றவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. காலையில் அவரது அப்சலின் அக்கா, மாமா ஆகியோர் தேடி வந்த நிலையில் ஒசூர் வள்ளுவர் நகர், கோவில் பின்புறமாக அடித்துக்கொல்லப்பட்ட அப்சலின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறந்த மாணவனாக விளங்கிய அப்சல் கொலைக்கு காரணமும் தடையமும் கிடைக்காமல் ஒசூர் நகர போலீசார் ஒருமாதத்திற்கு மேலாக மூன்று தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வழிப்பறி கொள்ளையர்கள் இரண்டு பேரை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கொலைக்கான காரணம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திலிப்குமார்(21), ஸ்டாலின் என்கிற ராஜேஷ் (24)ஆகிய இருவர் இரவு நேரங்களில் கஞ்சா போதையில் அவ்வப்போது வழிப்பறியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும், சம்பவத்தன்று நள்ளிரவில் நடந்து வந்த கல்லூரி மாணவன் அப்சலிடம் பணம் கேட்டபோது இல்லை எனக்கூறியதால் கோபமடைந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் வழக்கமாக கஞ்சா அடிக்கும் பகுதிக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் பணம்,செல்போன் எதுவும் இல்லாததால் ஆத்திரத்தில் இருவரும் கஞ்சா போதையில் கல்லால் அடித்துக்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
2வது குற்றவாளி ஸ்டாலின் என்கிற ராஜேஷ் கடந்தவாரம் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் குற்றவாளி திலீப் குமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.