ஓசூரில் 27, 28ம் தேதிகளில் கால்நடைகள் ஏலம் நடைபெறுகிறது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில், கழிவு செய்யப்பட்ட கால்நடைகள் ஏலம் விடப்படுகிறது.

Update: 2021-07-14 01:51 GMT

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில்,  கழிவு செய்யப்பட்ட கால்நடைகளை, வரும்  27 மற்றும் 28ம் தேதிகளில் காலை 10 மணி அளவில் ஏலக்குழுவினர் முன்னிலையில், பொது ஏலம்  விடப்படவுள்ளது.

ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர், முன்பணமாக ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான வங்கி வரைவோலையை "DEPUTY DIRECTOR, DISTRICT LIVESTOCK FARM, HOSUR" என்ற முகவரிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பெற்று மாவட்ட கால்நடை பண்ணையின் துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

பொது ஏலத்தில், மாட்டினங்கள் 66, ஆட்டினங்கள் 4, பன்றிகள் 13, குதிரை 1 என மொத்தம் 84 கால்நடைகள் ஏலம் விடப்படும். கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநர், மாவட்ட கால்நடை பண்ணை, ஓசூர் அலுவலகத்தினை நேரிலோ, அல்லது 04344&296832 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News