ஓசூர் செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை மீண்டும் சோதனை
ஓசூரில் செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மீண்டும் சோதனைே நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நேரு நகரில் வசித்து வரும் வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி பிரிவு கோட்ட செயற்பொறியாளர் சோபனா (58) என்பவரது வீட்டில் நவம்பர் 3ம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்கநகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடந்த வாரம் பெண் செயற்பொறியாளர் சோபனாவுக்கு அவரது துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அந்த செய்தி வெளிவந்த நிலையில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று ஓசூரில் உள்ள அவரது வீட்டில் மீண்டும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி., மாதயன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், பெண் செயற்பொறியளர் சோபனா வீட்டில் விசாரணை மேற்கொண்டு பிறகு அங்கிருந்து விசாரணைக்காக வேலூருக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டதில், விசாரணைக்கு பின் கைது செய்வதாக தெரிவித்தனர்.