'அவனெல்லாம் ஒரு தலைவனா?'- அண்ணாமலை பற்றி அமைச்சர் காந்தி விமர்சனம்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் காந்தி ஒருமையில் பேசி விமர்சித்து உள்ளார்.

Update: 2021-12-15 08:05 GMT

ஓசூரில் நடந்த விழாவில் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை அருகே உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று உதவிகளை வழங்கினார்..

பின்னர் அமைச்சர் காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையினரின் நடவடிக்கை பழிவாங்கும் செயலா? என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு

அவர்கள் 10 ஆண்டுகள் நடத்திய ஆட்சி, மேற்கொண்ட செயல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே இது நடைமுறையான செயல்தான் என்றார்.

கருத்து சுதந்திரம் தி.மு.க. ஆட்சியில் தடுக்கப்படுவதாக பா.ஜ.க. தலைவர்  அண்ணாமலை குறிப்பிட்டது பற்றி  கேட்டதற்கு

அவனெல்லாம் ஒரு தலைவனா அவனை பற்றி எல்லாம் நீ கேட்கலாமா? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் அவன் படித்தவனை போல பேச வேண்டாமா? பதவி என்பது சில காலம் தான். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தைரியமாக பேசி வருகிறான் என விமர்சித்த அவர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் வழங்கி வருகிறார். முடிந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் புண்படாத வகையிலேயே நடந்து கொள்கிறார் என்றார்.

Tags:    

Similar News