பைக் மீது தனியார் கம்பெனி பஸ் மோதி விபத்து
ஓசூர் அருகே பைக் மீது தனியார் கம்பெனி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்;
ஓசூர் அருகே பைக் மீது தனியார் கம்பெனி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரும் இவரது உறவினர் பழனியம்மாள் என்பவரும் அவர்களுக்கு சொந்தமான பைக்கில் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள மீனாட்சி சாலை ஜங்சன் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக பின்னால் வந்த தனியார் கம்பெனி பஸ், பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருமகிறார்கள். இந்த விபத்து குறித்து ஓசூர் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ வடிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.