ஓசூரில் தொடர் மழையில் மரம் விழுந்து விபத்து: ஆவின் பால் விநியோகஸ்தர் படுகாயம்
ஓசூரில் தொடர் மழையின் காரணமாக மரம் சாய்ந்து விழுந்த விபத்தில் ஆவின் பால் வினியோகிஸ்தர் பலத்த காயமடைந்தார்.;
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வேரோடு சாய்ந்த 45 ஆண்டுகால பழமைவாய்ந்த மரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சில தினங்களாக மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்துவந்தது.
இந்நிலையில் ஓசூரில் உள்ள பாகலூர் தமிழ்நாடு விட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 45 ஆண்டு கால பழமைவாய்ந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.
அந்த நேரத்தில் கடைகளுக்கு பால் வினியோக செய்ய வந்த ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த ரவி(45) தனது இருசக்கர வாகனத்தோடு மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மரத்தினடியில் மாட்டியிருந்த நபரை மீட்டு எடுத்து படுகாயாம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்க்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், சாலையின் நடுவே வேரோடு சாய்திருந்த மரத்தின் கிளைகளை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.