ஓசூர் சோதனைச்சாவடியில் 217 லிட்டர் மதுபாட்டில்கள், கார் பறிமுதல்: ஒருவர் கைது

ஓசூர் அடுத்த ஜூஜுவாடி சோதனைச்சாவடியில் 217 லிட்டர் கர்நாடக மதுபாட்டில்கள், இன்னோவா காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-09-24 02:45 GMT

மதுபாட்டில்களை கடத்தி வந்த ராஜா.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்பேரில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமை காவலர் குணசீலன் ஆகியோர் நேற்று இரவு ஜூஜூவாடி போலீஸ் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்ரம்பள்ளி அருகே பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் ராஜா என்பவர் கர்நாடகா மாநிலத்திலிருந்து கர்நாடக மாநில மதுபானங்களை தன்னுடைய இன்னோவா காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்து இன்னோவா கார் மற்றும் 67 ஆயிரத்து 503 ரூபாய் மதிப்பிலான சுமார் 217 லிட்டர் கர்நாடக மதுபானங்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வர்கின்றனர்.

Tags:    

Similar News