சிறுமியை சீரழித்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை

Update: 2021-02-04 07:00 GMT

ஓசூரில் சிறுமியை சீரழித்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி போயர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். முதியவரான இவர் அந்த பகுதியில் மாடு மேய்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த  15 வயது சிறுமிக்கு கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிந்தது. இதைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது கோவிந்தராஜ் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதில் சிறுமி கர்ப்பமானதும் தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோவிந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் கோவிந்தராஜூக்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பேத்தி முறை உள்ள உறவுக்கார பெண் என தெரிந்தும், அவருடன் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், என மொத்தம் 34 ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News