கார்,லாரி மோதி விபத்து-ஒருவர் பலி

Update: 2021-03-18 10:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தீபக் சிங். இவர், இவரது காரில் நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் ஓசூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.அப்போது சின்னாறு என்ற இடத்தில் எதிரே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் தீபக் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெங்கடேஷ் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து சூளகிரி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News