ஏடிஎம் கார்டை ஏமாற்றி முதியவரிடம் திருட்டு
உதவி செய்வதுபோல் நடித்து ரூபாய் 70,000 கொள்ளையடித்த மர்ம நபர்;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஒன்னல்வாடியை சேர்ந்தவர் தேவராஜ்(65) கூலித்தொழிலாளியான இவர், ஒசூர் மாநகராட்சி பழைய பெங்களூரு சாலையில் அமைந்துள்ள ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்ததாகவும், ஏடிஎமில் முதியவர் திணறி வந்த நிலையில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உதவுவதாக கூறி ஏடிஎம் கார்டையும் பாஸ்வர்டு எண்ணையும் கேட்டுள்ளார்.
இவர் இரகசிய எண்ணை கூறியதும் வாலிபர் தன்னிடம் வைத்திருந்த காலாவதியான ஏடிஎம் கார்டை முதியவரிடம் வழங்கிவிட்டு பின்னர் முயற்சிக்குமாறு கூறி முதியவரின் ஏடிஎம் கார்டு எடுத்து சென்றுள்ளார். முதியவர் காலாவதியான மாற்றப்பட்டு ஏடிஎம் கார்டு என தெரியாமல் வேரொறு ஏடிஎம்மிற்கும் சென்றபோது தனது வங்கி கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
அவர் யோசிப்பதற்குள்ளாக 50,000 ரூபாய் அக்கவுண்டிலிருந்து எடுக்கப்பட்டதாக மற்றொரு குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக முதியவர் SBI வங்கி கிளையில் நேரில் தெரிவித்ததை தொடர்ந்து ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டது.
அக்கவுண்டை பார்த்ததில் மர்மநபர் 20000 ரூபாயை தனியார் ஏடிஎமில் ரொக்கமாகவும், குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் 50000 ரூபாய்க்கு ஆடைகளை வாங்கியிருப்பதும் தெரியவந்தது. அக்கவுண்டில் இருந்த 16,2000 ரூபாயில் 70,000 ரூபாயை மர்மநபர் ஆட்டையைப்போட்ட நிலையில் 92,000 ரூபாய் தப்பியது. முதியவர் தேவராஜ் ஒசூர் நகர காவல்நிலையத்தில் புகார் வழங்கியதையடுத்து போலிசார் மர்மநபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.