பர்கூர் 30வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுகவை சேர்ந்த எல்லப்பன் வெற்றி
பர்கூர் ஒன்றிய 30வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுகவை சேர்ந்த எல்லப்பன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் 30வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
தேர்தலில் முகுந்தன், எல்லப்பன், வெங்கடேசன், விநாயகமூர்த்தி, வேலாயுதம் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் திமுகவை சேர்ந்த எல்லப்பன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.