கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது
கரூர் மாவட்டத்தில் இன்று மாலை பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது;
கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், கரூர் நகரம், ராயனூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியத்திற்கு மேல் கருமேகங்கள் திரண்டு வந்து மிதமான மழை பெய்தது. சில இடங்களில் நல்ல மழையும் பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.