கோவக்குளத்தில் இருசக்கர வாகன விபத்து: 2 பேர் பலி, ஒருவருக்கு பலத்த காயம்

கிருஷ்ணராயபுரம் அருகே கோவக்குளத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.;

Update: 2021-10-04 14:15 GMT

உயிரிழந்தவர்களை அதிர்ச்சியுடன் பார்க்கும் உறவினர்கள்.

கரூர் மாவட்டம்,   கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள  கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியை சேர்ந்த பாண்டியன்  மகன் பிரசாந்த்(34). பிரசாந்த் சமையல் வேலை செய்பவர். பிரசாந்தும் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன்  மகன் புஷ்பராஜ்(35) இருவரும்  மேட்டு மகாதானபுரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணராயபுரத்துக்கு சென்றனர்.

கோவக்குளம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வீரணம்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் சுப்பிரமணி(34) ஓட்டி வந்த இருசக்கர வாகனமும்,மோதிக் கொண்டன. இதில், பிரசாந்த் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  பலத்த காயமடைந்த புஷ்பராஜ் கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்த மாயனூர்  காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி இறந்த 2  உடல்களையும் கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக மாயனுர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News