டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு ரூ. 50 ஆயிரம் மதுபானம் திருட்டு
கரூரில் அரசு மதுபானக் கடையின் சுவற்றை துளையிட்டு 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மரம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து மாயனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சமத்துவபுரம் அருகே அரசு டாஸ்மார்க் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் நேற்று வியாபாரம் செய்து விட்டு சூப்பர் வைசர் சுரேஷ்குமார் மற்றும் பணியாளர்களுடன் கணக்கு பார்த்து வியாபாரம் செய்த பணத்தை எடுத்து கொண்டு இரவு 7.00 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்கள்.
இன்று காலை கடையை திறந்து பார்த்தபோது, கடையின் பின் சுவர் துளையிடப்பட்டு இருந்தது. மேலும், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில் பெட்டிகளும் சில திருடு போயிருந்தன. அதிர்ச்சியடைந்த சூப்பர்வைசர் சுரேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மாயனூர் காவல் நிலையப் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
மேலும், உடனடியாக கடையில் இருப்பை கணக்கெடுத்தனர். சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானம் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சுமாா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை மட்டும் திருடு போனது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மாயனூர் காவல் நிலையப் போலீசார் திருடு போன கடை சூப்பர்வைசர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.