ஊரக உள்ளாட்சி இடை தேர்தல் தம்பிதுரை தீவிர வாக்கு சேகரிப்பு
அதிமுக வேட்பாளரை ஆதரித்து கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுறை, முன்னாள் அமைச்சர் சின்னசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.;
கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தானேஸ் சென்ற முத்துக்குமாரை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை இன்று பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
கரூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தானேஸ் என்ற முத்துக்குமார் போட்டியிடுகிறார்.
இவருக்கு வாக்கு கேட்டு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. தம்பிதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி ஆகியோர் இன்று 8வது வார்டு உட்பட்ட கள்ளுமடை, வெள்ளியனை, ஜெகதாபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
அப்போது அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு. தம்பிதுரை பேசுகையில், கரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் அதிமுகவினர் ஆக உள்ளனர். எனவே 8 வது வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தானேஸ் சென்ற முத்துக்குமார் வெற்றி பெற்றால் இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நிறைய நலத்திட்டங்களை வழங்க முடியும். மாறாக திமுகவினர் வெற்றி பெற்றால் எந்த பிரயோஜனமும் இருக்காது என பேசி வேட்பாளர் தானேஸ் என்ற முத்துக்குமாருக்கு வாக்கு சேகரித்தார்.