கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2021-10-09 08:30 GMT

ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல் வாக்குப் பதிவை பார்வையிடுகிறார் ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒரு ஒன்றிய குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி தலைவர் மற்றும் 12 ஊராட்சி உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. இவற்றுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இவற்றில், 5 ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 10 உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கண்ணையன், அதிமுக சார்பில் முத்துக்குமார் உள்பட 16 பேர் போட்டியிடுகின்றனர் மொத்தம் உள்ள 10 ஊராட்சி பதவிகளுக்காக 47 பேர் போட்டியிடுகின்றனர். 42 ஆயிரத்து 605 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

இவர்களுக்காக 56 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 18 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக  கண்டறியப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெள்ளியணை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரிடம் வாக்குப்பதிவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News