கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகை கொள்ளை
கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.;
கரூரில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 58 சவரன் தங்க நகைகளையும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் அருகே புலியூர் ஏ பி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் புலியூர் சிமெண்ட் ஆலை முன்பு உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இன்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, மகன், மற்றும் மகளுடன் உணவு விடுதிக்கு சென்றார். மாலையில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கே படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. மேலும் வீட்டில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.