கரூர் மாவட்டம் முழுவதும் மழை: நிரம்பி வழிந்த குளங்கள்

கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் கடவூர், சேங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய குளங்கள் நிரம்பின.

Update: 2021-09-25 09:00 GMT

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த நல்ல மழையால் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சேங்கல் குளம் நிரம்பி வழிந்தோடுகிறது.

கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பநிலை நிலவியது. கோடை காலம் போல் மக்கள் வெப்பநிலையை உணர்ந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து சுமார்  ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால், குளித்தலையில் அதிகபட்சமாக 82 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதேபோல கரூரில் நகரில் 50 மி மீ, பாலவிடுதி 53 மி.மீ, கடவூர் பகுதியில் 50 மி.மீ மழை பெய்தது.

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் கிராமப்பகுதியில் உள்ள சிறிய அளவிலான குளங்கள் நிரம்பின. குறிப்பாக சின்ன சேங்கல் பகுதியில் உள்ள குளம் இந்த மழையால் முழுவதும்  நிரம்பி கடைக்கால் வழியாக தண்ணீர் வழிந்து ஓடியது. இதை அந்த கிராமத்து மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். நேற்று இரவு ஒரு நாள் பெய்த மழையால் கடந்த சில தினங்களாக நிலவிய கடுமையான வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.  இதனால் மக்களும்,  விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News