கரணம் தப்பினால் மரணம்: அபாயகரமான சுடுகாட்டு பாதையால் தவிக்கும் மக்கள்

அபாயகரமான காட்டு ஓடை கரைவழியாக இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் அவலநிலை மாற கிராமமக்கள் கோரிக்கை.

Update: 2021-09-11 13:30 GMT

காட்டு ஓடைக்குள் விழுந்துவிடும் அபாயத்தில் சுடுகாட்டுக்கு உயிரிழந்தவரின் உடலை சுமந்து செல்லும் கிராமவாசிகள்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே சாந்துவார்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 1000 பேர் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்துக்கு செல்ல சரியான சாலை வசதி இருந்தாலும், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல சரியான பாதை இல்லை. அந்த கிராமத்தில் உள்ள காட்டு ஓடையின் ஒத்தையடி கரைதான் சுடுகாட்டுக்குச் செல்லும் வழி. இந்த ஓடையின் கரையின் வழியாகவே சுடுகாட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ஊராட்சி நிர்வாகத்தினர் இந்த காட்டு ஓடை கரையில் சுவர் எழுப்பி பலப்படுத்தி தருவதாக கூறி ஓடையை புல்டோசர் கொண்டு பறித்துள்ளனர். ஆனால், சுவர் எழுப்பவில்லை. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஓடை கரை கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து வருவதால், ஓடை மேலிருந்த பாதை மிகவும் குறுகலாகி இப்பொழுது அபாயகரமான நிலையில் உள்ளது.

இந்த அபாயகரமான நிலையில் உள்ள ஒற்றையடிப் பாதையில் உயிரிழந்தவர்களை இறுதிகாரியம் செய்வதற்காக தட்டுத் தடுமாறிக் கொண்டு செல்கின்றனர் உறவினர்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் இருந்து சுடுகாட்டுக்குச் செல்லும் நடைபாதையை சரி செய்து தர வேண்டும் என்பதே இந்த கிராமத்து மக்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News