கரூர் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடு தீவிரம்

கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர்.

Update: 2021-05-14 06:45 GMT

கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்

கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாவட்டங்களுக்குள் பயணிக்க தடை இல்லை என்றாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதோ அதிகப்படியான ஆட்களை ஏற்றிக்கொண்டு கார்கள் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், கரூர் மாவட்ட எல்லையான வைரமடை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இருந்து தேவையில்லாமல் கரூர் மாவட்டத்திற்குள் வருவதை போலீசார் தடுத்து வருகின்றனர்.  அங்குள்ள சோதனைச் சாவடியை கடக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களின் ஆவணங்களை பரிசோதிக்கின்றனர். மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிக்கு செல்பவர்கள் மட்டும் உரிய ஆவணங்களைக் காண்பித்த பிறகு அவர்களை கரூர் மாவட்டத்தில் அனுமதிக்கின்றனர்.

 அதேபோல கார் உள்ளிட்ட வாகனங்களில் அரசு விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.  தேவையற்ற வகையில் கரூர் மாவட்டத்திற்கு வரும் நபர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

#Instanews #TamilNadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Karur #Police #vehicleChecks #fines #violators #கரூர் #போலீசார் #விதிமீறல் #அபராதம் #தீவிரவாகனசோதனை #intensive #checks #rules #police #lockdowm #quarantine #coronavirus #covid #covid-19 #Severe #stayhome #staysafe

Tags:    

Similar News