கரூரில் ஸ்மார்ட் ரேசன் கார்டுதாரர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பவுச் வழங்கல்

கரூரில் ஸ்மார்ட் ரேசன் கார்டுதாரர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள், உதவி மைய எண் பொறிக்கப்பட்ட பவுச் வழங்கப்பட்டன.

Update: 2021-08-04 17:36 GMT

கரூரில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் உதவி மைய எண் பொறிக்கப்பட்ட ரேசன்கார்டு பவுச்களை வழங்கும் ஆட்சியர் பிரபுசங்கர்

கரூரில் 3 லட்சத்து 25 ஆயிரம் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பவுச் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் இன்று துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள நியாய விலை கடையில் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு கொரானா விழிப்புணர்வு பவுச் வழங்குவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.

  ''கொரோனா இல்லா கரூர்" திட்டத்தின் நான்காவது நாளான இன்று நடைபெறும் இந்த பவுச் வழங்கும் நிகழ்ச்சி இன்று துவங்கி கரூர் மாவட்டத்தில் உள்ள 592 நியாயவிலைக் கடைகளில் உள்ள 3 லட்சத்து 25 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

 கரூர் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு ரேஷன் ஸ்மார்ட் அட்டைகள் வைக்கும் இந்த பவுச்சில் கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களான முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளி மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை உணர்த்தும் வாசகங்களுடன் கூடிய படங்கள் மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் இடம்பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர்  கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ஸ்மார்ட்கார்டுகளுக்கான பவுச் வழங்கிய பின்னர்,  கொரோனா விழிப்புணர்வு உறுதி ஏற்றுக் கொண்டார்.

Tags:    

Similar News