மழலைகளின் மனிதாபிமானம்

கரூரில் சேமிப்பு பணத்தை சிறுவர், சிறுமிகள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய நிகழ்ச்சி அனைரின் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

Update: 2021-05-16 16:30 GMT

கரூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சமீரா தனது சகோதரி சாகிரா மற்றும் தம்பி சாகித் ஆகியோர் சிறுக சிறுக சேர்த்த உண்டியல் பணம் 3,170 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வருக்கு அனுப்பியுள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி சேர்ந்தவர் சாதிக் அலி. இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து முகநூல் நண்பர் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு சமூக சேவைகளை செய்து வைக்கிறார்

குறிப்பாக ஏழை எளிய எளியவர்களின் மருத்துவ அறுவை சிகிச்சைக்காகவும் பெற்றோரை எதிர்பாராத விதமாக இழந்து தவிக்கும் குழந்தைகள் நலனுக்காக நிதி திரட்டி அவர்களுக்கு உதவி வருகிறார்.

இவரது மகள்தான் சமீரா கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது தங்கை சாகிரா, தம்பி சாகித் ஆகிய 3 பேரும் நிவாரண நிதிக்காக 3,170 ரூபாய் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக தொகையை அனுப்பி உள்ளனர்.

இவர்கள் எப்படி அனுப்பினார்கள் என்று கேட்டால் மூவரும் தந்தை சாதிக் அலி அவ்வப்போது கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேர்த்து வருகின்றனர் அப்படி சேர்த்து வைத்து பணத்தை தான் உண்டியலை உடைத்து எண்ணினர் அதில் 3,170 ரூபாய் இருந்தது அந்த பணத்தை அப்படியே முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக அனுப்பியுள்ளனர்.

ஏற்கனவே இந்த சிறுவர்கள் கஜா புயலின் போது தாங்கள் சேகரித்த தொகையிலிருந்து பல்வேறு நிவாரண பொருட்களை வாங்கி அனுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து குழந்தையின் தந்தை சாதிக் அலி,   கூறுகையில் குழந்தைகளிடம் சிறு சேமிப்பை ஊக்குவிப்பதற்காக அவ்வப்போது சிறிய தொகை கொடுப்பது வழக்கம் அந்த பணத்தை உண்டியலில் அவர்கள் சேர்த்து வைப்பார்கள் இப்பொழுது கொரோனா பாதிப்பால் மக்கள் படும் பாட்டை டிவியில் நாள்தோறும் பார்க்கும் குழந்தைகள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தாங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை கொடுத்துள்ளனர் என்றார்.

இதேபோல கரூர் அருகில் உள்ள கோடங்கிபட்டியைச் ஜோதீஸ்வரன் என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சைக்கிள் வாங்க வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News