கரூரில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கல்; மூட்டைகளுடன் ஒருவர் கைது
கரூரில் 1,100 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மணி எனபவரை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் கள்ளத்தனமாக விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கரூரில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்த பிரிவின் உதவி ஆய்வாளர் பிரியா மற்றும் காவலர்கள் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலத்தில் மணி என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 1,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் சத்யபிரியா 1,100 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கிய குற்றத்திற்காக மணியை கைது செய்தார்.