கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு

கரூர் மாவட்டத்தில், 15 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில், இன்று மாலை பிரச்சாரம் நிறைவடைந்தது

Update: 2021-10-07 12:30 GMT

வெள்ளியணை பகுதியில், உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை நிறைவு செய்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

கரூரில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒரு ஒன்றியக் குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி தலைவர் மற்றும் 12 ஊராட்சி உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு  9 ம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கான இடைத் தேர்தலில்,  திமுக சார்பில் கன்னையனும், அதிமுக சார்பில் முத்துகுமாரும் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தலுக்காக கடந்த 10 தினங்களாக நடைபெற்று வந்த  பரப்புரை இன்று மாலை நிறைவு பெற்றது. இன்று காலை. க.பரமத்தி பகுதியில் தனது பரப்புரையை தொடங்கிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வெள்ளியணை பகுதியில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கண்ணையனுக்கு வாக்கு கேட்டு தனது பரப்புரையை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், 5 மாத திமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்துக்கு 2 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்ட ஊராட்சி வார்டு பகுதியில் 10 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதன் மூலமே ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர முடியும் கூறினார். இதேபோல, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், க.பரமத்தி பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Tags:    

Similar News