கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி, திமுக கூட்டணியில் உள்ள 1ஆவது வார்டில் வெற்றி பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், இந்த பேரூராட்சியில் சிபிஐ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கவுன்சிலரான கலாராணி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக, இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் கலாராணி போட்டியிடவில்லை. மாறாக, திமுக சார்பில் 3ஆவது வார்டில் வெற்றி பெற்ற புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கே, வேறு யாரும் போட்டியிடாததால் திமுகவைச் சேர்ந்த புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் இதனால் அங்கே பரபரப்பு நிலவியது.