தீரன் சின்னமலை நினைவு தினம்: திமுக, கொமதேக மரியாதை செலுத்தினர்
தீரன் சின்னமலை 216 வது நினைவு தினத்தையொட்டி கரூரில் அவரது சிலைக்கு திமுக, கொமதேக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி கரூரில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக மற்றும் கொமதேகவினர்.
கரூரில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 216 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது இதையொட்டி கரூரில் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட திமுகவினர் தீரன் சின்னமலையின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல கரூர் பேருந்து நிலைய பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில வர்த்தகர் அணி செயலாளர் விஷா சண்முகம், மாவட்ட செயலாளர் மூர்த்தி, திமுக முக்கிய பிரதிநிதிகள் முன்னிலையில் தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு குழுமியிருந்தோர் தீரன்சின்னமலை நினைவுகளைப் போற்றும் வகையில் முழக்கம் எழுப்பினர்.