கரூர் போலீசாருக்கு உடையில் பொருத்தும் கேமரா; மாவட்ட எஸ்பி., வழங்கல்
கரூரில் ரோந்து செல்லும் போலீசாருக்கு உடையில் பொருத்தும் கண்காணிப்பு கேமராக்களை எஸ்பி சுந்தரவடிவேல் வழங்கினார்.;
கரூரில் போலீசார் ஒருவருக்கு உடையில் பொருத்தும் காமிராவை பொருத்துகிறார் எஸ்பி. சுந்தரவடிவேல்
கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ஊக்கத்தொகை, பயிற்சிக்கான ஆணை மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் உடையில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய கேமராக்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவேல் வழங்கினார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக தேர்வாகி உள்ள 10 பேருக்கு அவர்களது பயிற்சிக்கான ஆணைகளையும், மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் கூடும் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பயன்படக் கூடிய மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட உபகரணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் வழங்கினார்.
மேலும், மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது உடையில் பொருத்தி பயன்படுத்தக் கூடிய கேமராக்களையும் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளை திறமையாக கையாண்டு திறம்பட பணிபுரிந்த 17 காவலர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையும் வழங்கப்பட்டது.