அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: வகுப்பு மாணவர்களுக்கு பரிசோதனை
பொரணி கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மாணவர்களுக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது;
கரூரில் கொரோனா தொற்று பாதித்த ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியில், மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் பொரணி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியை ஆதிலோகநாயகிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிகிழமை வரை பள்ளிக்கு வந்த ஆசிரியை ஆதி லோகநாயகிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் இன்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை ஆதிலோகநாயகியின் மகன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். இவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஆதிலோகநாயகி தனக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, தொற்று உறுதியானது. தகவலறிந்த, கரூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் பொரணி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கல்வித் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.